இக்கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள எட்டுக் கவிதைகளும்
நிலவுடைமைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கண்ட கிராம
சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. உழைக்கும் மக்கள் உணர்வு
பூர்வமாக ஒன்று சேர்வதையும் தமக்கு எதிராக எழுந்த சக்திகளை
முறியடிக்கப் போர் தொடுப்பதையும், அத்தகைய போரில் அவர்கள் எதிர்
கள்ளும் இடர்ப்பாடுகளையும் பிரதிபலிக்கின்றன. பொதுவாக
உழைக்கும் மக்களையும் குறிப்பாக பட்டியல் இனத்து மக்களதுமான
வாழ்க்கை எவ்வளவு பரிதாபத்திற்கு உரியது என்பதையும் விலாவாரியாகச்
சொல்லுகின்றன. “காத்தான் கடவுளான கதை” என்னும் கவிதை கடவுட்
கருத்து உருவான வகைமயையும் நிறுவன சமயங்களின்
உள்நோக்கங்களையும் வரலாறு மற்றும் இயங்கியல் பொருள் முதல்
வாதங்களின் அடிப்படையில் ஆய்வு செய்கிறது. பேரறிஞர் காரல்
மார்க்சின் எழுத்துக்களோடு உறவு வைத்திருப்போர் இதனை எளிதில்
புரிந்து கள்வர். இக்கவிதைகள் தமிழ்க் கவிதை உலகில் ஒரு புதிய
வழித்தடம். இறுதியாக இக்கவிதைகள் அனைத்தும் என்னுடையதும் என்
மக்களுடையதுமான அவலமும், துடிப்பும், நம்பிக்கையும், ஒன்றிணைந்த
வாழ்க்கையின் ஒளித்தடங்களில் முளைவிட்டிருப்பவை. இதனை
மார்புயர்த்திக் கூறுவேன்.


Reviews
There are no reviews yet.